Wednesday, June 30, 2010

மாயி அண்ணை வந்திருக்காக... மாப்பிள்ளை மொக்கச் சாமி வந்திருக்காக..

அடியாத மாடு படியாது எண்டும், மறதிக்கு மருந்து மாஸ்ரரை பிரம்பெண்டும் சொல்லிச் சொல்லி எங்கடை சேர் மார்,ரீச்சர் மார்,வீட்டுக் காரர் பெடியளுக்கு அடியாத அடியில்லை.எண்டாலும் ஏதோ அடிச்சுப் படிப்பிச்சபடியாலை இண்டைக்கு ஏதோ நல்லாய் இருக்கிறம்.அந்த வகையிலை அவையளுக்கு நன்றியையும் சொல்லிக் கொள்ளுறாதோடை விசயத்துக்கு வருவம்.


நாங்களும் கனவிதமான அடியளை கனவிதமான வாத்திமாரட்டை விதம் வித்மா வாங்கிக் கட்டியிருக்கிறம்.ஞானேந்திரம் சேர் எண்டால் 6 ம் ஆண்டு, 7 ம் ஆண்டு படிக்கிற பெடியளை காற்சட்டைக்குப் பின்பக்கத்தாலை கொளுவி எயாரிலை தூக்கி வைச்சிருப்பார்.பெடியன் பதகளிச்சுத் துடிக்கிற துடிப்பிலேயே அடுத்தமுறை குழப்படி செய்யமாட்டான்.தவராஜா சேர் மாதிரி கன்னத்து மயிரை மேலே பிடிச்சு இழுத்தால் அதின்ரை வலி தெரிஞ்சவன் அடுத்தமுறை நல்ல பொடியனா இருப்பான்.கனத்தை வடிவா,இதம் பதமா செற் பண்ணிக் கொண்டு, எதிர்பாக்காத நேரத்தில கன்னத்திலை சடார் எண்டு போடிற சிவகுமார் சேரின்டை அடி பழ்கினவன் அப்பிடியொரு பிழையை வாழ்க்கையிலை விடமாட்டான்.இல்லையெண்டால் தவனேசன் சேரட்டை பின்னுக்குப் புளிக்கப் புளிக்க வாங்கினவன் அப்பிடியொரு அடியை இனி வாங்கோணும் எண்டு நினைக்கவே மாட்டான்.இல்லையெண்டால் மரியதாஸ் சேரட்டை உடம்பிலை எங்கை அடிவிழுது எண்டு தெரியாமலே எல்லா இடமும் அடி வாங்கினவனெண்டால் அடுத்த தரம் கணக்கு ஒழுங்காச் செய்து கொண்டுவருவான்.
இப்பிடி கனவிதமான அடியள் சின்னனிலை இருக்கேக்கை பள்ளிக்கூடத்திலை,ரியூசனிலை எல்லாரும் வாங்கிறது தான்.பிறகு கொஞ்சம் வளந்தாப் போலையும் திருந்தாட்டில் என்ன செய்யிறது..?மாடுகள் மாதிரி வளந்ததுகளுக்கு அடிச்சால் அவையளுக்குத் தான் கை நோகும்.ரியூசனுகளாலை திரத்தி விடுறது தான் ஒரே வழி.றோட்டிலை நிண்டு நாலு பேரட்டை திட்டு வாங்கியாவது புத்தி வரட்டும் எண்டு.(இருந்தால் தானே வாறதுக்கு எண்டு தானே கேட்கிறியள்.சரி எங்களுக்கு இல்லையெண்டே வையுங்கோவன்)இது நாங்கள் ஏ. எல் (A/L) படிச்சுக் கொண்டிருக்கேக்கை நடந்த சம்பவம் ஒண்டு.பள்ளிக்கூடம் 2, 2.30 க்கு முடிஞ்சாப்போலை, வீட்டை வந்து மேலைக் கழுவிப் போட்டு அவுக் அவுகெண்டு சாப்பிட்டு ஒரு 4, 5 கட்டைக்கு அங்காலை இருக்கிற ரியூசனுக்கு சைக்கிளை உழக்கித் தள்ளவேண்டியது தான்.எங்களுக்கெல்லாம் படிப்பெண்றது வீட்டை கூப்பிட்டு பேர்சனல் கிளாஸ்(Personal Class) போட்டுப் படிப்பிக்கிற நிலையிலை வீட்டின்ரை பொருளாதாரம் இருக்கவில்லை.பள்ளிக்கூடம், ஒரு ரியூசன்,சிலவேளைகளில் ஒன்றிரண்டு குறூப் கிளஸ்(Group Class) அவ்வளவு தான்.


காசின்ரை அருமை கொஞ்சம் தெரிஞ்ச ப்டியாலை கொஞ்சம் ஒழுங்காத் தான் ரியூசனுகளுக்குப் போறது.அண்டைக்கும் போய் வகுப்பிலை குந்தியாச்சுது. 3.30 க்கு நல்லையா சேரின்ரை Pure Maths.அண்டைக்கு ஆள் வரயில்லை.எங்கடை கொட்டிலுக்குப் பக்கத்திலை எங்கடை பயோ(பிஒ) காரருக்கு தம்பர் Zoology(விலங்கியல்) எடுத்துக் கொண்டிருந்தார்.இஞ்சாலை நாங்கள் கதை தான்.பகிடிகள், பம்பலுகளிலை நேரம் போகுது.அடிக்கிற பம்பலுகளுக்கு சிரிப்பு வராட்டிலும், பக்கத்து கொட்டிலுக்கை பயோ(Bio) பெட்டையள், பொடியளுக்குத் தம்பர் குட்டிறதும், பெட்டியளின்டை கொப்பியளைத் தூக்கி எறிஞ்சு "ஓடடி நாயே.." எண்டு திரத்திறதைப் பாக்கேக்கை சிரிப்பு வராட்டிலும் உள்ளுக்கை ஏதோ குட்டிச் சந்தோசமாயிருக்கும்.உண்மையிலை இந்த, இப்படியான, வக்கிர, வன்முறை ஆசைகளுக்கு நாங்க்கள் கடந்து வந்த போர்ச்சூழலும் காராணமாகுமோவேனவும் சிந்திதிருக்கிறான்.அது தலைப்புக்கு சம்பந்தமில்லாததாலை இப்ப அதை விட்டிட்டு விசயத்துக்கு வருவம்.


நாங்கள் இடைக்கிடை பம்பலுகளுக்கு அது சிரிப்பு வராட்டிலும் ஒருக்கால், கெக்கட்டம் விட்டுச் சிரிக்கிறது.ஏனெண்டால் சேவலின்டை சத்ததைக் கேட்கிற பேட்டுக்கோழி என்ன றியாக்சன் குடுக்குது எண்டு ஒரு லுக் ஒண்டு அடிக்கிறாதுக்காண்டி.இதைக் கேட்டிட்டு தியாகேசண்ணை(எங்கடை ரியூசன் டிரக்ரர்) வந்து "அங்காலை வகுப்பு நடக்குதல்லோ.. சத்தம் போடாமல் இருங்கோ பாப்பம்.." எண்டு உறுக்கி விட்டுப் போவார்.பெடியளும் அவர் வரேக்கை மட்டும் கோழிக் கள்ளன் மாதிரி மண்டிக் கொண்டிருந்திட்டு ஆள் போன கையோடை சமாவைத் தொடங்கிடுவாங்கள்.எண்டாலும் ஒரே மாதிரி ஒராள் பம்பலடிக்க மற்றாக்கள் பாத்துச் சிரிச்சுக் கொண்டிருக்கிறது அலுப்படிக்க வெளிக்கிடுது.


கொஞ்சம் வித்தியாசமாச் செய்வம் எண்டிட்டு கிறியேற்றிவிடியைப்(Creativity) பாவிச்சு வகுப்புக்கு வரேக்கை கலட்டிக் கொண்டு வந்த கஜன்ரை சைக்கிளின்ரை பெல்(Bell) மூடியிலை ஒண்டைத் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு,அதிலை பேனையாலை தட்டி "டிங்.. டிங் " எண்டு மணியடிச்சுக்கொண்டு, "பராக்குப்" பாட தொடங்கினாங்கள்.வாசு, சுபறாஜ்,இரண்டு பேரும் எழும்பி நிண்டு மணியை அடிச்சுப் போட்டு, "இத்தால் சகலரும் அறியத்தருவது... கிருத்திகன் வந்திருக்காக.. நீல கலர் ரீ சேட் போட்டிருக்காக, கறுத்தக் கலர் ஜீன்ஸ் போட்டிருக்காக , பிறவுண் கலர் .. போட்டிருக்காக.. அவர் மூண்டாம் வாங்கில்லை இஞ்சையிருந்து 2 வதா இருக்கிறவவை லுக்கு விடுறாக, அவ இந்தக் கலர் அது போட்டுக் கொண்டந்திருக்காகாக .. அப்படி எண்டு மாயி படத்தில இழுத்த மாதிரி ஒவ்வொண்டுக்கும் ஒரு " Ha.. " போட்டு எல்லாரையும் பற்றி இழுத்துக் கொண்டு கொண்டிருந்தாங்கள்.முதல்லை கொஞ்சம் நோமலாத் தொடங்கின பராக்கு வாசுவினரையும் சுபர்ரஜ்ஜின்ரையும் திறமையாலை அதோடை கமலை மாதிரி மூத்த குடிமக்களின்ரை Quide ஓடை வகுப்பிலையிருந்த முழுப் பெட்டியள், பெடியள் எல்லாரும் கவனிக்கிற மாதிரி பிக்கப் ஆகத் தொடங்கிற்றுது.விசிலடிப்புக்கள், கூவடிப்புக்கள்,கைதட்டல்கள், மேசை தட்டல்கள் எல்லாம் பலமாக் கிடைச்சுது.தியாகேசண்ணையும் 2 ,3 முறை வந்து பேசிப் போட்டுப் போட்டார்.ஆனாலும் இவங்கள் விட்ட பாடில்லை.பெடியள் குடுத்த உற்சாகம்.உசுப்புக்கு மேலாலை பெடியளே சொன்னங்கள்.. "நீ நடத்து மச்சான்..அந்தாள் கிடந்துது.." பிறகும் பராக்குத் தொடங்கிச்சுது.


"டிங்.. டிங்.. இந்தால் சகலருக்கும் அறியத் தருவது.. இன்னார் வந்திருக்காக.. இன்னது செய்யிறாக.. " தியாகேசண்ணை இந்தமுறை ஒருத்தரும் எதிர் பாக்காதமாதிரி திடீரெண்டு ஒரு தரையிறக்கத் தாக்குதலை பயோ கொட்டில் பக்கத்தாலை வந்து, எங்கடை கொட்டிலின்ரை முன் பக்கமா வந்து ஊடறுத்துத் தாக்கிக் கொண்டு வந்தார்.சிங்கம் சீறிக் கொண்டு தான் வந்தது. வகுப்பு கப் சிப்பானது." யார்றா அந்தப் பராக்குப் பாடினவன்.. செம்மரியளே படிக்க வாறனியளோ.. இல்லாட்டில் வேறை என்னத்துக்கும் வாறனியளோ.. எண்டு அறம் புறமாப் பேசிக் கொண்டு "எங்கையடா அந்த பெல்? எண்டு முன் 3 வாங்கிலிலை இருந்த பெடியளை எழுப்பி பெட்டியளுக்கு முன்னாலை, சேட்டுப் பொக்கற், ஜீன்ஸ் பொக்கற் எல்லாம் தடவி ஆமிக்காரன் செக் பண்ணிறாமதிரி செக் பண்ணினார்.எல்லாற்றை பொக்கற்றைத் தட்டியும் பெல்ல் கிடக்கையில்லை.பெல்லை கொட்டிலுக்கை கீழை கிடந்த மண்ணுக்கை தாட்டுப் போட்டாங்கள் பொடியள்.தியாகேசண்ணைக்கு இவ்வளவு பெடியளுக்கு முன்னாலை அதுவும் அங்காலை குமர்ப் பெட்டையளுக்கு முன்னாலை தன்ரை மிசன் பெயிலியர்(Mission Failure) ஆனவுடன் ஆளுக்கு சும்மா கோபம் சுர்ரெண்டு ஏறிச்சுது."ஓடுங்கோடா பு.. மக்களே..உங்களுக்க் படிப்பும் வேண்டாம் ஒரு மசிரும் வேண்டாம்...உங்களுக்குக் கடுப்பெண்டால் வேறை யாரையும் பாருங்கோ.இஞ்சை வந்து தேயாதையுங்கோ..எண்டு சொல்லி கொப்பி எல்லாத்தையும் தூக்கி கையிலை குடுத்து மூண்டு வாங்கில் காரரையும் துரத்தியாச்சுது.இப்ப எங்களைப் பாத்து பயோ பெட்டையள் கொடுப்புக்குள்ளை சிரிச்சாகள்.எங்களுக்கென்ன பின்னங்காற்சட்டையில கிடந்த மண்ணை வடிவாத் தட்டிப் போட்டு சைக்கிளையெடுத்துக் கொண்டு வெளிக்கிட்டம் தியாகேசண்ணை நாளைக்கு வகுப்புக்குளை விடுவார் தானே எண்ட நம்பிக்கையிலை.ஆனால் 2 ,3 நாளாகியும் எங்களை உள்ள விடுறமாதிரி காணேல்லை.பிறகு பால்குடி மாதிரி கொஞ்ச நல்ல பொடியள் போய் நல்லையா சேரோடை கதைச்சாங்கள்.ஆள் கூப்பிட்டார் எங்களையும் தியாகேசண்ணையையும்."ஏன் நீங்கள் கூ காட்டின்னீங்கள்..?உந்தக் குரங்குச் சேட்டையள் இனி விடப் படாது சரிதானே." அது எங்களுக்கு.பிறகு தியாகேசண்ணையைக் கூப்பிட்டு "அடேய் தியாகேஸ், அவங்களை நான் பொறுப்பெடுக்கிறன்.. அவங்கள் இனி குழப்படி செய்ய மாட்டாங்கள்.. ஆ சரியே.. பொடியளெண்டால் அப்பிடித் தான் நாலு பகிடி, முசுப்பாத்தி விடத் தான் செய்வாங்கள்..நீயும் அதுக்குப் போய் அவங்களோடை ஏறுப் பட்டுக் கொண்டு.. ஆ சரி இனி அவங்கள் அப்பிடிச் செய்ய மாட்டாங்கள்.. நான் குரன்டே. " அவ்வளவு தான் தியாகேஸண்ணை மூச்சுப் பேச்சில்லை.அது தான் நல்லையா சேரின்டை பவர்.பிறாகென்ன வகுப்பிலை போக் குந்தினது தான். எண்டாலும் திருந்தின பாடில்லை.மீண்டும் அடுத்த் கலைப்பு .. அது யாரால்.. எப்பிடி.. ஏன்?

10 comments:

 1. உந்தக் கொட்டில் மறக்க முடியாத ஒன்று.

  ReplyDelete
 2. யோவ் அது தியாகேஸ் இல்லை... வியாகேஸ். சிவத்திரனிட்டை எனக்கு ஆப்பு வாங்கித்தந்ததும் இதே வாசு-சுபராஜ்தான். அருளருட்ட அடிவாங்கித்தந்ததும் இதே வாசு-சுபராஜ்தான். சோதிலிங்கம் சேரை ‘சோதீஈஈஈ’ எண்டு கூப்பிட்டதைத்தவிர நானொண்டும் செய்யேலை

  அதெல்லாம் சரி அவரிட மகனை இஞ்ச கண்டனான்.

  ReplyDelete
 3. இதே கொட்டிலில் தான் நானும் படித்தேன். பழைய நினைவுகளை மீட்டிய பதிவு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. வியாகேஸ் அண்ணையின் அக்மார்க் தேய்ச்சல் புனா எல்லாம் எழுதியிருக்கிறீயள். ஆள் எங்களுடன் நல்ல வாரப்பாடு, நல்லையா சேர் உந்த முசுப்பாத்தி என்ற வார்த்தையை விடவே மாட்டார். அடே பொடியள் இப்ப முசுப்பாத்தி பண்ணினால் பிறகு மற்றவன் எஞ்ஜினியராக வரேக்கை நீங்கள் ரோட்டு அளப்பியள் என்றார் பலருக்கு அது நடந்திருக்கின்றது.

  எங்களுக்கு தில்லைநாதன் சேர் பேசிய பேச்சுப்போல் ஒருதரும் வாங்கியிருக்கமாட்டியள் ஆனாலும் மனிசன் பெட்டையளை வீட்டை அனுப்பிப்போட்டு தான் பேசியது.

  உதெல்லாம் இனிக் கிடைக்காது. கிருத்திகன் குழப்படி எனத் தெரியும் ஆள் படு பயங்கரக் குழப்படி என இப்போதான் தெரிகின்றது.

  பால்குடியும் குழப்படியோ. தம்பி அவை உவன் ஆதிரையின் குழப்படிகளை எனக்கு மட்டும் ரகசியமாக மெயில் பண்ணுங்கோ.

  ReplyDelete
 5. அய்யோ.... என்னைப் பாத்து என்ன வார்த்தை சொல்லீட்டியள் வந்தியண்ணா... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 6. வடலியூரான், சோக்கா எழுதியிருக்கிறாய்... வாசிக்கேக்க பழைய பல ஞாபகங்கள் வந்து போச்சுது. வாங்கின அடிகளும் ஞாபகம் வந்திச்சு.

  நல்லையா சேர் எப்பவும் பொடியளின்ர பக்கம் தான். செல்லையா பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டி முதல் எல்லாப் பள்ளிக் கூட விளையாட்டுப் போட்டிக்கும் லீவு விட்டுடுவார். அவரின்ர ‘அட றிசேர்வ்’ எண்டைக்குமே மறக்க முடியாதது...

  ReplyDelete
 7. ம்ம் சிறி அண்ணா மறகமுடியாத கொட்டில் தான்...

  ReplyDelete
 8. கீத் உங்கடை முந்தினதொரு பதிவிலை எப்ப்டிடி ஆழ்வாப் பிள்ளை ஆண்டவர்பிள்ளையானரோ அதை மாதிரித்தான் வியாகேஸ் தியாகெஸானார்

  ReplyDelete
 9. வந்தியண்ணா, நன்றிகள் உங்களீன் நினைவுகளையும் பகர்ந்தமைக்கு.கீத் குழப்படி இல்லை.நல்ல பொடியன்.சும்மா ஒரு பமப்லுக்கு ஆளின்ரை பெய்ரைப் போட்டுகிடகுது

  ReplyDelete
 10. நன்றி பால்குடி.நல்லையர் ஒரு ஆள் தான்

  ReplyDelete