யாழ்தேவி நட்சத்திரப் பதிவராக தெரிவுசெய்யப் பட்டுள்ளதாக இரண்டுநாட்களுக்கு முன்னர் எனக்கு அனுப்பப் பட்டிருந்த மின்னஞ்சலை இன்று திங்கட்கிழமை காலை அலுவலகத்துக்குச் சென்று திறந்து பார்த்தபோது என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை. காரணம், என் பதிவுகள், என்னை நட்சத்திரமாக்குமளவுக்கு தகுதியானவை, தராதரமானவ, தராசிலே வைத்து நிறுக்கக் கூடியளவுக்கு நிறையுடையவையென்று நானே இன்னும் நினைத்ததில்லை.அதனால் எதிர்பாராமல் கிடைத்த அந்த அங்கீகாரத்தால்,கௌரவிப்பால் இரட்டிப்பு சந்தோசம்.நன்றிகள் கோடி யாழ்தேவிக்கு.
நான் பதிவுலகிற்கு மிக அண்மையில், ஆறேழு மாத காலத்திற்கு முன்னர் தான் அறிமுகமானவன்.அதுவரை அண்ணன் ஆதிரை, நண்பர் கிருத்திகனின் மெய் சொல்லப் போகின்றேன், லோசன் அண்ணாவின் லோஸனின் களம், வந்தியண்ணாவின் என் உளறல்கள்,நண்பன் பால்குடியின் தாய்மடி,வானம் பாடும் அண்ணனின் கரவைக்குரல், கானாப் பிரபாவின் மடத்து வாசல் பிள்ளையாரடி, சுவிசில் இருந்து எழுதும் சயந்தன் அண்ணாவின் சாரல்,பனையூரான், மருதமூரானின் பதிவுகள் போன்றவற்றை அவ்வப்போது மேய்வதுண்டு.ஏன் நாம் பதிவு எழுதினாலென்ன என்று என்னையும் எண்ண வைத்து, இன்று உங்களையும் இம்சைப்பட வைத்த பிதாமகர்கள் இவர்கள் தான்.
நானும் பதிவு எழுதினாலென்ன என்று பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதையும் தாண்டி, நடைமுறை வாழ்க்கையில், தேவையில்லாமல் வாயைதிறக்காத ரகத்தைச் சேர்ந்த நான், என் சமூகத்தில் புரையோடிப் போன ஒரு சில கொள்கைகள், தப்பபிப்பிராயங்கள், பழக்கவழக்கங்கள் பற்றி என் சமூகமே ஏன்...?, கனலும் நெஞ்சு, மூளாத் தீ, என் மன வானில் போன்ற வகைப் படுத்தல்களினூடு பதிவுகள் மூலமாக வாய் திறக்க முயல்வதுண்டு.
அத்தோடு எங்கள் இனம் பட்ட அவலங்கள், கண்ட அனுபவங்கள், கஸ்ரங்கள் ,கொடுமைகள், கொடூரங்களில் நானும் பட்ட மிக மிகச் சிலவற்றை மீட்டி, அனுபவங்களாகவும், கற்பனைக் கதைகளாகவும் பதிவதுமுண்டு.அது மட்டுமில்லாமல் சிலவேளைகளில் தொழில்நுட்பப் பக்கம் எட்டிப் பார்த்தாலும் இதுவரை விளையாட்டுப் பக்கமோ, சினிமாப் பக்கமோ தொட்டுப் பார்த்தது கூட இல்லை.விரைவில் அங்கும் செல்ல வேண்டும்.மேலும் என் பதிவை மெருகூட்டவேண்டும்.மனதிலே வரித்த கருதை எழுத்திலே சொருக வேண்டும் என்ற எனது திட்டங்கள் எல்லாவற்றுக்கும் அத்திவாரமிட்டு என்னை நட்சத்திரப் பதிவராக்கிய யாழ்தேவிக்கு நன்றியைக் கூறிக் கொள்வதோடு,எனது பதிவையும் வாசித்தருளும் வாசக்ப் பெருமக்களுக்கும் நன்றியைக் கூறி,எதிர்காலத்தில் மென் மேலும் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாய் எழுதுவேன் என்று உறுதி கூறிக்கொள்கின்றேன்.
Monday, June 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்..:)
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் தளம் மெருகு படுத்தப் பட வேண்டும். ஒரு பதிவிலிருது முகப்புக்கு(Home page) போக முடியவில்லை. Tabs add பண்ண வேண்டும்.
வாழ்த்துக்கள் தம்பி. நட்சத்திரவாரத்தில் நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteநட்சத்திர வார வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள். தாங்கள் நினைப்பது எல்லாம் உங்கள் எழுத்துக்களில் பிரதி பலிக்கவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநட்சத்திர பதிவு வாரத்துக்கு வாழ்த்துக்கள் ...கலக்குங்கள்..காத்திருக்கின்றோம்....
ReplyDeleteநட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள். தொடருங்கோ.
ReplyDeleteவாழ்த்துக்களடா என் செல்வமே
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா... நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பவன்.
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பெயரிலி.உங்கள் கரிசனைய செயற்படுத்துகின்ரேன்
ReplyDeleteவந்தியண்ணா வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி .
ReplyDeleteஆதிரையண்ணா வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி .
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் வடலியூரானின் நன்றிகள் ஜனா உங்களுக்கு .
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் வடலியூரானின் நன்றிகள் கருணையூரான் உங்களுக்கு .
ReplyDeleteதமிழ் மதுரம் உங்களின் வாழ்த்து, வருகைக்கு வடலியூரானின் நன்றிகள்
ReplyDeleteதங்கமுகுந்தன் உங்களின் வாழ்த்து, வருகைக்கு வடலியூரானின் நன்றிகள்
ReplyDeleteநன்றிகள் கீத் செல்லமே..
ReplyDeleteநன்றிகள் நண்பா பால்குடி வாழ்த்துக்கும் வருகைகும்
ReplyDelete