Sunday, October 3, 2010

க...க...க...கல்லூரி சாலை கல்லூரிசாலை

(அண்மையில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக் கழக, இளநிலை தமிழ் விஞ்ஞான பட்டதாரிகளின் ஒன்று கூடலான "சங்கமம்" நிகழ்விலே அன்புத்தம்பி "கடுங்குத்து" கங்காதீபனால் எழுதி வாசிக்கப் பட்ட கவிதை இது.சாதாரணமாக எல்லாரும் கடந்துவருகின்ற பல்கலை,விடுதி(Hostel) வாழ்க்கையின் சுமை, சுகம் என பல விடயங்களை சுவை பட சுமந்து வருகின்றது கவிதை.வாசித்துத் தான் பாருங்கோவன்)



அகவை அது கண்டிருந்தோம்

அனுபவங்கள் ஏதுமில்லை

கனவு பல கண்டு வந்தோம்

கண்டதொன்று ஏதுமில்லை!!!







அண்டமெல்லாம் அங்கிருக்கு

கம்பஸ் ஒன்று கிடைத்துவிட்டால்

உன்னை விட வேறு இல்லை

எத்தனையோ பேர் சொல்லித் தந்தர்!!!




தெருவோரத் தென்னையேறி

தேங்காயின் ருசிபார்த்து

கொழுகொழு மாந்தோப்பில்

மாங்காயின் ருசிதேடி!!!



பள்ளியை கட்டடிச்சு

பகல்பூரா கிறவுண்டில் நிண்டு

ரியூசனில் கண்ணடிச்சு

ரோட்டோரம் சைட்டடிச்சு

வீட்டிலே பொய்யடிச்சு

பொறியியல் தழுவி வந்தோர் சிலர்






என்னத்தைத் தான் பயின்று வந்தீர்

வாழ்விற்கு வரையறைகள்

வரம்பு வரம்பாய் வகுத்திருக்க

புத்தகத்தில் முகம் புதைத்து

முழு இரவும் முகம் கழுவி

அயலட்டம் தெரியாமல்

அக்கம் பக்கம் பாராமல்

அம்மாவின் அரவணைப்பில்

அப்பிடியும் வந்திருந்தார் சில பேர்

"டேய்" அம்மவின் அதட்டலது

அங்கிருந்த கையெடுத்து

அணைத்துக்கொன்டோன் புத்தகத்தை


- அப்பிடித்தான் எங்கிருந்தோ வந்திருந்தவர்கள்

இணைந்துகொண்டோம் பல்கலையில்





கம்பஸின் பெயர் சொல்லி

காலமெல்லாம் சைட்டடித்தோம்

பஸ்ஸில் ஏறி பாவையர் கேட்குமுனே

பல்கலையின் பெயர் சொன்னோம்

அவனைய்ம் இவளையும்

இடைக்கிடையே கிசுகிசுத்தோம்

இதனாலே இணைத்துவிட்டு

இணைவதற்கு சோடியின்றி

நீலப்படம் பார்த்து

நிம்மதிகள் அடைந்து கொண்டோம்!!!



ஆங்கிலங்கள் விளங்காமல்

எத்தனையை மாறிப் படித்தோம்

எவனுமே சொல்லாமல்

எக்சாமில்(Exam) தெரிந்து கொண்டோம்



தம்மடிச்சோம் தண்ணியடிச்சோம்

வெறியின்றி வெறி பிடித்தோம்

அறிவொன்று கூடியதாய்

ஆட்டங்கள் போட்டு நின்றோம்

பைற்ஸ்(Bytes) தின்றவனும்

ஊத்தி அங்கே கொடுத்தவனும்

நடித்ததை நாமறிவோம்!!!



வெள்ளவத்தை பஸ் ஏறி

உள்ளொன்றும்இல்லாமல்

ஜீன்ஸ் மட்டும் மாட்டி

வந்துமாட்டிக் கொண்டோன்

எத்தனியோ எத்தனை பேர்?

எத்தனியோ நோண்டிகள் எம்மிடத்தில்??

வகை வகையாய் சொல்லிவிட

வாக்கியங்கள் போதவில்லை

இரவிரவாய் இராவின் இன்பமான நினைவுகளை

எப்பிடித்தான் எடுதுரைப்போம்!!!




தூசணங்கள், அம்மணங்கள்

தும்மலுக்கும் சொல்லிக் கொள்வோம்

"பு..." என்று சொல்லியே

புன்னகைக்கப் பழகிக் கொண்டோம்.

கோவத்தில் கண் சிவப்போர்

கல்குலேற்றர் எறிந்துடைப்போர்

தெரிஞ்வன் வருவான் என

கன்ரீனில் காத்திருப்போர்

காசு தருவானா என ஏங்கி நிற்போர்

காதருகில் செல்போனாய் கண்ணயர்ந்தோர்

வாளி வைத்தே வாழ்ந்து கொண்டோர்

வாயாலே வதைதெடுப்போர்

குளிக்காமல் கொலை செய்தோர்

நித்திரையில் பள்ளிகொண்டோர்

இத்தனைக்குள்ளும்

எப்பிடித் தான் நாம் இருந்தோம்???





எல்லாரும் எங்கிருந்தோம்

எத்தனை உணர்வுகளை

எமக்குள்ளே பகிந்து கொண்டோம்???

பெண்பிள்ளை போல்ஆண்பிள்ளை சிலரிங்கே

இன்னுமா மாறவில்லை

மைக் பிடித்துப் பேசுகிறார்

அச்சம் அங்கமெல்லாம்

நாணம் நாவெல்லாம்

நயனும் நடிப்பும்

சிரித்துக் கொண்டே

நாமிருக்க கலைந்துவிட்ட காலம

தைஎப்படித்தான் நாம் மறப்போம்???




லெக்சர் பல இருந்தோம்

லெட்டர்கள் எழுதி வந்தோம்

செமி(Semi) தான் வருகையிலே

குப்பி என்ற பெயரிலே -

எம்மைக் கொன்றவர்கள் எத்தனை பேர்

சத்தமின்றி சகித்துக் கொண்டோம்!!!



லெப்பையள் போல நாமங்கே

லெக்சர்களைக் கேட்டுக் கொண்டோம்!!!

கடைசி வாங்கிலே கண்ணயர்ந்து நாம்

தூங்கிகனவு பல கண்டெழுந்தோம்

கம்பனிகள் பல திறந்த காலங்கள் இனி வருமா???



கள்ள சைன்(Signature) அடிச்சோம்

கட் டடிச்சோம் கல்லுச் சுவருக்கும் கிஸ் அடிச்சோம்

பிள்ளைக் குட்டிக் காரர் போல

பெரும் பிஸியாய் நாம் திரிந்தோம்

லெக்சருக்கு வருவான்

லேசாக காய்ச்சல் என்பான்

பக்கத்திலை இருந்தவனுக்கும்

பல்லுக் கொதியென்பான்

குட்டித்தூக்கம் என்பான்

குறட்டிவிட்டுத் தானெழுவான்

அட்டையொன்று(File) தான் வைத்திருப்பான்

மட்டைக்குள்ளே ஏதுமில்லை

கையெழுத்து வைக்க காகிதம் வருகையிலே

கையிலுள்ள பேனையொன்றை

களவாகச் சுட்டிருப்பான் கிடைக்குமோ காலமொன்று

மீண்டுமொருமுறை செய்வதற்கு???




நொந்தவனை நோகடித்து

நோகாமல் நொங்கெடுத்து

நோண்டிகள் பலசெய்து

நேற்றிருந்த இன்பங்கள்

இனியெங்கே நாம் காண்போம்???



வந்தவரும் போனவரும்

வாழ்வியல் இன்பங்களை

அனுபவித்த இயல்பொன்றை

இங்கிதமாய் சொல்வதற்கு

இனிவருமா காலங்கள்???

வகையிட்டுIDifferentiation) தொகையிட்டு(Integration) வயதாகிப் போச்சுதையா!!!

தொகையிட்டுத் தொகையிட்டு

தொப்பையும் வந்திரிச்சு

சுட்டிகள் படிச்சு குட்டிச் சுவரானோம்???






பல்கலை வாழ்வின் பலசுவைகள்

பழகிய நினைவுகளின் பெரும் சுமைகள்

இன்றைய நினைவுகள் இனி நாளை எமக்கில்லை

எம் வழியே பிஸியாகி எமக்கென்று நிலையெடுப்போம்

எம்மையே நாம் மறப்போம்

எப்படித்தான் இருந்தாலும்

சங்கமத்தில் சங்கமித்தநினைவுகளை

சுமந்து கொள்வோம் நண்பர்களே...!!!




தம்பி கடுங்குத்துக் கங்காதீபனுக்கு மீண்டும் உங்கள் சார்பாக நன்றிகள்.கடுங்குத்து கங்காதீபனின் பெயரைப் பார்த்து இவருக்கு ஏன் இந்தக் காரணப் பட்டப் பெயர் வந்தது என்று தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம்.எங்கடை மொறட்டுவைக் கம்பஸிலை சோதினை வருதெண்டால் எல்லாரும் தலை கீழா நிண்டு குத்திக்கொண்டு (அதி தீவிரமா,படுபயங்கரமா படிக்கிறதைத் தான் "கோட் வேட்டிலை" குத்திறது எண்டு சொல்லிறது ) இருக்கேக்கை இவர், 1 மணிக்கு சோதினையெண்டால் 12 மணிக்கு கம்பஸுக்கு வந்து பெடியளெல்லாம் கடைசிக்கட்டமா ரிவிசன்(Revision) செய்ஞ்சு கொண்டிருக்கேக்கை நோட்சை(Notes) வாங்கிப் பாத்திட்டு என்ன பாடம் இண்டைக்கு சோதினை நடக்கப் போகுது எண்டு கண்டு பிடிச்சிட்டு அதுக்குப் பிறகு தான் அங்கை இருக்கிற பெடியளட்டை நோட்சை வாங்கி அதிலை வச்சு கடுங்குத்து குத்த தொடங்குவார்.பேந்தென்ன சோதினைக்கு போகு மட்டும் ஒரு மணித்தியாலம் கடுங் குத்து தான்.அப்ப கடுங்குத்துக் காரர் தானே...???மீண்டுமொர்ரு நன்றி!!!

6 comments:

  1. வசீகரன்October 3, 2010 at 10:27 PM

    ம்ம்ம் கலக்கலான கம்பஸ் ஞாபகங்களை, கலர்புல்லான நினைவ்லைகளை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.இதை வாசிக்கும் போது நாங்களும் பேராதனைப் பல்கலையிலே செய்த கூத்துக்கள் என் கண் முன்னே வந்து செல்கின்றன. கம்பஸ் காலம் எல்லாராலும் மறக்கமுடியாத ஒன்று. அதை நினைப்பூட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. உண்மையான விசயங்களை அருமையாக சொல்லி இருக்கிறார் கங்காதீபன் ....அதை எங்களோடு பகிர்ந்து கொண்ட வடலியூரானுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  3. வரிக்கு வரி ரசிக்கும் படியாய் உள்ளது..ஆனால் இடையிடையே விரும்பத் தகாத சில சொல்லாடலகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.எனினும் நல்லதொரு ஆக்கம்.

    ReplyDelete
  4. வசீகரன் உங்கள் வருகைக்கும் கருதிடுகைக்கும் நன்றிகள்.நீங்கள் பேராதனிப் பலகலையைச் சேர்ந்தவரா. என்றால் பேந்தேன் பேசுவான் கம்பஸ் எண்டால் சும்மா கலக்கி எறின்சிருக்குமே. ஹ்ஸ்ரல்கள்(Hostel), சூப்பர் கிளைமேற், ஆட்ஸ் faculty அது ,இது என்டு உள்ள சுப்பர் சரக்குகளுக்குப் பின்னாலை எல்லாம் போஇ வந்திரிப்பியளே. அது சரி நீங்கள் எந்தப் பீடம், எந்த வருடம்.

    ReplyDelete
  5. கருணையூரான் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்

    ReplyDelete
  6. சுரேஸ் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்.நான் இல்லாததை எழுதவில்லை. அவை கம்பஸ் மாணவர்களிடம் இருப்பவை தான்.எனினும் பதிவிலே அது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற உங்கள் கருத்தையும் கரிசனையில் எடுத்து இனிமேல் இவற்றை தவிக்க முயல்கிறேன்.

    ReplyDelete