Sunday, May 9, 2010

சங்கேத பாசை - தொழில்நுட்பம் 1

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சில பதிவுகளை தொழில்நுட்பம் என்ற பகுதியூடாக உங்களுடன் பகிரலாம் என்று எண்ணுகிறேன்.ஆனாலும் இது எந்தளவுக்கு சாத்தியப் பாடானதாக இருக்குமென்று நானறியேன்.ஆனாலும் ஒரு நப்பாசை போனால் போகுது எதற்கும் எழுதிப்பார் என்கிறது உள்மனது.சரி பண்ணித்தான் பார்ப்போமே என்று எழுத விழைகின்றேன் குற்றங்கள்,குறைகளை சுட்டிக்காட்ட கணனி வல்லுனர்கள் பலர் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில்.


அண்மையில் வந்து சக்கை போடு போட்ட உலகநாயகன்,பத்மசிறி,காதல் இளவரசன், கலைஞானி கமலஹாசனின்(நான் அடிப்படையில் ஒரு அதிதீவிர கமல் ரசிகன்.அது தான் உந்தளவு மிகப்படுத்தல்(Build Up)நேரம் கிடைத்தால் கமல் பற்றி விரிவாக ஒரு பதிவிடுகிறேன்.அதிலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றிக் கூறுகிறேன் இப்போது விட்டு விடுகிறேன்.சரியா?)உன்னைப் போலொருவன் படத்தில் காவல்துறை அதிகாரி E.G.றக்னயன் மாரார் அல்லது ஈ.G.ற்.Maaraar இடம்(மோகன்லாலின் வேடம்)சக காவல்துறை உதவி அதிகாரி ஒருவர் தம்மிடமுள்ள அப்துல்லா(Abdullah),அகமதுல்லா(Ahemadullah),இனையதுல்லா(Inaiyadullah),சரண்சங் லால் ஆகிய நான்கு தீவிரவாதிகளைப் பற்றி விளக்கும் போது இனயதுல்லவைப் பற்றி பின்வருமாறு கூறினார். இனையதுல்லா - Area Deputy commander of Jamaathudeva.லஷ்கர்-இ-தொய்பாவோடை பொலிடிகல் Wing, இந்தியாவோட No 2 rank,Software Engineer, Stegnography Expert .படத்துக்குள்ளேயே தகவலை digitate செய்து ஒளித்து வைக்கிற technology.பல terrorist organization website களுக்கு இவன் தான் designer.(ஆங்கிலம் கலந்தமைக்கு வாசகர்கள் மன்னிக்க வேண்டும்.படத்தில் அந்த அதிகாரி பேசியதை அப்பிடியே தமிழில் ஒப்புவிக்க விளைந்ததால் நேர்ந்த விளைவு அது)


அப்போது தான் ஸ்ரெக்னோகிறபி(stegnography) பற்றி ஒரு பதிவிடலாம் என்று எண்ணினேன்.முதலில் இந்த ஸ்ரெக்னோகிறபி(stegnography) க்கு சரியான தமிழ்ப் பததை என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்காகவும் அந்த ஆங்கிலப் பதத்தையே தொடர்ந்து பதிவில் பாவிக்க இருப்பதனாலும் வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.


ஒரு தரவானது(data)அனுப்புவருக்கும்(sender) பெறுனருக்கும்(receiver) இடையில் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் அனுப்புனரால் பெறுனருக்கு அனுப்பப்படும்.இடையில் உள்ளவர்களுக்கு தரவு அனுப்பப்படுகிறது என்றோ அல்லது அனுப்பபடுவது தெரிந்தாலும் என்ன செய்தி அனுப்பப்படுகின்றது என்றோ கண்டு பிடிப்பது கடினமாகும்.இவற்றுள் தேவையான தகவலை மறைத்து அனுப்புதல்(Hideen Writing) தான் ஸ்டெக்னொக்ரபி எனப்படும்.


இதைப்போல் இன்னொரு தொழில்நுட்பமும் உள்ளது.ஒருவர் ஏதோ ஒரு தகவலை இன்னொருவருக்கு அனுப்புகிறார் என்று விளங்கும்.ஆனால் அதை விளங்குவதோ,அதிலிருந்து உண்மையான் தகவலை கண்டறிவதோ கடினமாக இருக்கும்.அது தான் கிறிப்டோகிறபி(cryptography).சங்கேத மொழி என்று சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோமல்லவா அதுதான் இது.ஸ்ரெக்னோகிறபிக்கும் கிறிப்டோகிறபிக்குமிடையே மிகச் சிறிய ஒரு வித்தியாசம் தான்.


முதலாவதில் படம்(Image) போன்ற ஏதாவதொன்றில் தகவல் ஒளிக்கப்பட்டிருக்கும். ஆனால் பார்ப்பவர்களுக்கு அது ஒரு சாதாரண ஒரு படம் போலத் தான் தோற்றும்.ஆனால் இரண்டாவதில் தரவானது மற்றவர்களால் விளங்கப்பட முடியாத ஒரு தகவலாக மாற்றப்பட்டு அனுப்பப்படும்.இடையில் உள்ளவர்களுக்கு அதை விளங்குவதோ அல்லது அதை வைத்துக்கொண்டு உண்மையான(Original) தகவலை கண்டு பிடிப்பதோ சிரமமாக இருக்கும்.ஸ்டெக்னோக்றபியில் தகவல் மறைத்து அனுப்பப் படுகின்றது என்பதே தெரியாத்.ஆனால் கிறிப்டொகிறபியில் ஏதோ தகவல் ஒன்று அனுப்பப் படுகின்றது எனபது விளங்கும்.ஆனால் அதிலிருந்து உண்மையான த்கவலைக் கண்டறியமுடியாது.


நான் ஏலவே சொன்னது போல அதை பெறுபவர் உடன்படிக்கையின்படி அவரால் அதைப் பிரித்து அதிலிருந்து உண்மையான தகவலைப் பெற்றுக் கொள்ளமுடியும்.இதிலே எங்களுக்கு பரிச்சயமுள்ள கிறிப்டோகிறபி ஐப்(சங்கேத பாஷை) பற்றியும் ச்டெக்னொக்ரப்க்ய் பற்றியும் அனைவருக்கும் விளங்கக் கூடியதான சின்ன உதாரணங்களைப் பார்ப்பதுடன் இந்தப் பதிவை நிறுத்துவதாகவும் அடுத்தபகுதியில் சங்கேதபகுதியின் மிகுதியையும் அதற்கடுத்த பதிவில் ச்டெக்னொக்ரப்க்ய் பற்றியும் பதிவதாய் உத்தேசம். முதலில் ச்டெக்னொக்ரப்க்ய்க்குரிய அந்த உதாரணத்தைப் பார்ப்போம்.





இரண்டு படங்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் மறைத்து அனுப்பபடும் தரவு ஆகும்



அண்மையில் எனக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திண்டுக்கல் ஐ .லியோனியின் அந்தக்காலம் இந்தக்காலம் நிகழ்ச்சியின் காணொளி(Video)ஒன்றைக் காணக்கிடைத்தது.அந்த நிகழ்ச்சியில் லியோனி சொல்வார் ஒரு கணவன் மனைவியிடையே சண்டை வந்து மனைவி கோபித்துக் கொண்டே வெளியே சென்று,சிறிது நேரத்தின் பின் மீண்டும் வந்து வீட்டு வாசலில் நிற்பாள்.தாயைக் கண்ட தனயன் தந்தையிடம் தகவலை தெரிவிப்பான்.தந்தையும் உள்ளே வருமாறு கூறும்படி மகனிடம் சொல்லிவிடுவார்.அவனும் சென்று தாயிடம் சொல்ல அவளோ தாய்க்குலத்திற்கேயுரிய பிடிவாததுடனும், வரட்டுக் கௌரவத்துடனும் அடம்பிடித்து நிற்பாள்.அப்போது தந்தை மகனிடம் ."அப்பா சாப்பிட வேணுமாம்.கெதியாக வரச்சொல்லு.வராவிட்டால் அப்பா பக்கத்து வீட்டை சாப்பிட போய் விடுவாராம் எண்டு கொம்மாட்டை போய்ச் சொல்லிவிடு கொம்மாக்கு விளங்கும்" என்று சொல்லிவிடுவார்.உடனே தாய் பதறியடித்துக் கொண்டு உள்ளே வந்தாளாம்.
இங்கே "சாப்பிடுதல்" என்பது கணவனுக்கும்(அனுப்புனர்) மனைவிக்கும்(பெறுனர்)மட்டுமே விளங்குகின்ற மகனுக்கு(இடையிலுள்ளவர்களுக்கு) விளங்காத் ஒரு குறியீட்டு மொழியாகும்.சாப்பாடு என்றால் என்னவென்று எனக்கும் தெரியாது.உங்களுக்கும் தெரியுதோ தெரியாது.ஆனால் அது அவர்களுக்கே தெரிந்த ரகசியம்.

அடுத்ததாக கிறிப்டோகிறபிக்கு உரிய உதாரணமாக் நான் அனுபவப்பட்டதை இங்கே கொண்டுவந்து பொருத்தலாம் என்று எண்ணுகின்றேன்.ஒரளவு சிறு வயதில் ஒரு முறை வல்லிபுரக் கோவில் சமூத்திர தீர்த்தத்துக்கு ஓடையிலிருந்து வருகிற எனது பள்ளி நண்பனுடன் போயிருந்தேன்.அவனுடன் அவனது விளையாட்டுக்கழக், ஊர் நண்பர்கள் நால்வர். சரி கடலுக்கு நடக்கத் தொடங்கியாச்சுது.நடக்கிறது தெரியாமல் இருக்க எல்லாரும் ஒன்றில் தங்களது கூட்டணியினரோடு கதைத்துக் கொண்டு வருவார்கள் அல்லது அங்காலே போகும் பெண்கள் கூட்டணியோட கதைக்க முயற்சிப்பர்கள்.இவர்கள் தங்களுக்கேயே கதைத்துக் கொண்டார்கள். ஆனால் எனக்கு ஒன்றும் விளங்கவிலை. "ப்கடலுக்கு கபோ டகூ ரம்நே டக்கணும்ந ", "வளைஅ ர்பா, நல்ல டிவாத்தான்வ ள்இருக்கிறா".


இப்பிடி முழுக்கதையும் நடக்கத் தொடங்கினதிலையிருந்து போய்க் கொண்டிருந்தது .என்னாலை தாங்கேலாமல் போட்டுது.நான் இவனை பண்ணின ஆக்கினையில ஒருமாதிரி தாங்கள் ஒவ்வொரு சொல்லினதும் முதல் எழுத்தை கடைசியில் போட்டு உச்சரிப்பதால் மற்றவர்களுக்கு விளங்காமல் கதைப்பதாகக் கூறினான்.இப்போது மேலே சொன்ன இரு வச்னங்களையும் "கடலுக்குப் போக கூட நேரம் நடக்கணும் " என்றும் "அவளை பார், வடிவாத்தான் இருக்கிறாள்" என்றும் வாசிக்கலாம் என்று உங்களுக்கு விளங்கும்.பிறகு தான் எனக்கு எல்லாம் விளங்கிச்சுது.பிறகென்ன மற்றவர்களெல்லாம் கேட்கக்கூடாத வார்த்தைக்ளெல்லாம் கேட்கப்படாத வடிவத்தில் கேட்டுக் கொண்டார்கள். அதை விட்டிட்டு விசயத்துக்கு வருவோம்.




இரண்டு உதாரணங்களின் மூலமும் ஸ்ரெக்னோகிறபிக்கும் கிறிப்டோகிறபிக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்குவோம்.முதலாவதிலும் இரண்டாவதிலும் ஒரு செய்தி அனுப்புவரிடமிருந்து பெறுனருக்கு ஊடுகடத்தப் படுகிறது.அனுப்புவருக்கும் பெறுனருக்கும் மட்டுமே அதன் அர்த்தம் தெரிந்திருக்கிறது.முதலாவதில் இடையில் உள்ள சிறுவனுக்கு "சாப்பிடுதல்" என்பதன் அர்த்தம் புரியவில்லை என்று சொல்வதை விட அவன் "சாப்பிடுதல்" என்பதன் மூலம் ஒரு செய்தி கடத்தப் படுகின்றது என்று கூட அறியவில்லை அல்லது அறிய முயலவில்லை.ஆனால் இரண்டாவதாக உள்ள கிறிப்டோகிறபி இல் எனக்கு ஒரு செய்தி அவர்களுக்கிடையே கடத்தப் படுகின்றது என்பது விளங்குகிறது. ஆனால் அது என்னவென்று அறியமுடியாமல் இருக்கிறது.அங்கு தான் இரண்டும் வேறு பட்டு நிற்கின்றன.இந்த நுணுக்கமான் வித்தியாசத்தை உங்களால் விளங்கிக் கொண்டிருக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இப்பதிவை நிறுத்தி அடுத்த பதிவில் சந்திக்கலாம் என்று நினக்கின்றேன்.என்ன உதாரணம் விளங்கிச்சுதோ?இனி அடுத்த பதிவிலை மிச்சத்தைப் பார்ப்பம் என்ன?

8 comments:

  1. உதார‌ண‌ம் ந‌ன்றாக‌வே விள‌ங்கிற்று.

    ReplyDelete
  2. மிகவும் தெளிவாகவும் அழகாவும் எழுதப்பட்ட ஒரு விஞ்ஞானப் பதிவு. கிரிப்போட்டோகிராபி பற்றிய உதாரணம் கலக்கல்.

    ReplyDelete
  3. விளங்கிச்சுதோவோ? உப்பிடியான உதாரணங்களெல்லாம் போட்டுச் சொன்னால் விளாங்காமலே போகும்?
    இல்இதை நில்நீங்கள், வல்வடிவாச் சொல்சொல்லுறியள். எல்எங்கள் உல்உரைநடை நல்நல்லா இல்இருக்குது.

    அப்புறம் என்ன? கலக்கலா இருக்கு தங்கடை பதிவுகள். இப்ப கிட்டடியிலை தான் உங்கடை தளத்தைக் கண்டு பிடிச்சனான். இனியென்ன அடிக்கடி வருவன். கொண்டாட்டம். கும்மாளம் தான்!

    ReplyDelete
  4. கலக்கிறிங்க வடலியூரான் ....நன்றாக இருக்கின்றது..அனைவரும் தெரியவேண்டியதை தெளிவாக கொடுத்துள்ளீர்கள்

    ReplyDelete
  5. நன்றி வடுவூர் குமார் உங்கள் வருகைக்கு.,நல்லா விளங்கிடிச்சுது போல

    ReplyDelete
  6. வந்தி அண்ணா உங்களைப் போன்றவர்களது ஊக்கமே எம்மைத் தொடர்ந்தும் எழுத வைக்கும்.நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

    ReplyDelete
  7. கமல் உங்களூக்குத்தான் உதுக்கை கூட விளங்கியிருக்குது போல கிடக்குது..நன்றி,வருகைக்கும் பின்னூட்டதிற்கும்

    ReplyDelete
  8. கருணையூரான் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றி

    ReplyDelete