Saturday, July 2, 2011

யாழ்ப்பாணத்தார்

தலைப்பைப் பார்ததவுடன், இதுவொரு பிரதேசவாதத்தைக் கிளறுகின்ற பதிவு போல தோற்றினாலும், நிச்சயமாக இந்தப் பதிவு அதற்கு எதிர்மாறான திசையிலேயே பயணிக்கப் போகின்றது.இது எங்களிடையே தெரிந்தோ,தெரியாமலோ ஊறிப் போன எங்கள் மன நிலையைப் பற்றிப் பேசப்போகின்ற பதிவு இது.சில வேளைகளில் எமது இந்த பழக்கவழக்கம் சிலவேளைகளில் மற்றவர்களை நோகடிக்கும் என்பது கூட எமக்குத் தெரிவதில்லை அல்லது அல்ல்து அதுபற்றியெல்லாம் நாம் அலட்டிக்கொள்வதில்லை.இன்னும் சொல்லப் போனால்
அந்தளவு ஆழமாக நாம் இதை ஒரு விட்யமாக நினைத்து சிந்திப்பதேயில்லை.இதைப் பற்றியெல்லாம் சொல்லப்போகும் நானும் ஒரு யாழ்ப்பாணத்தவன் தான்.ஏன் இந்தக் கடைசி வரியில் உள்ள 'யாழ்ப்பாணத்தவன்' என்று அழுத்திச் சொல்வது/சொல்லிக்காட்டுவது கூட
அந்த மனநோயின் அறிகுறிதான்.ஆனாலும் நான் அந்த வரியை நான்
எழுதுகின்றேன்.காரணம்,வெளியிலிருந்து ஒருவன் சொல்ல முயன்றால் அதற்கு பலவேறு காரணங்கள் இட்டுக் கட்டப்பட்டு அது வேறு திசைநோக்கித் திருப்பி விடப்படலாம்.ஆனால் இதுவும் அப்பிடித் திருப்பிவிடப்பட மாட்டாதென்றில்லை.ஆனாலும் எழுத வேணும் போல ஒரு நான்கைந்து மாத்ததுக்குப் பிறகு இன்று தான் தோன்றியது.என்னால் எழுதப்பட்ட பதிவுகளிலே மிகவிரைவாக எழுதபபட்டது இந்தப்பதிவு.அதனால் சில கருத்துப்பிழைகள் இருந்தால் அதுபற்றி பின்னர் விவாதிக்கலாம்.


இலங்கையிலே இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திலே உள்ள எட்டுத் தமிழ் மாவட்டங்களான அம்பாறை,கிளிநொச்சி,திருகோணமலை,மட்டக்களப்பு,மன்னார்,
முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,வவுனியா(தமிழ் அகர வரிசைப்படி) மற்றும் அதற்கு வெளியே மத்திய மலைநாடு மற்றும் இலங்கைத் தலைநகர் கொழும்பிலேயும் தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்றனர். மொழியால் அனைவரும் தமிழர்கள் என்றாலும்அவரவர் வாழும் சூழலுக்கேற்றாற் போல் அவரவர்
பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள்,கலாச்சார கட்டமைப்புக்களில் சிற் சில வேறுபாடுகள் உள்ளன என்பது மறு(றை)க்கப்ப்படமுடியாத உண்மை.அந்த வேறுபாடுகள், மதிக்கப்ப்ட்டு, மற்றவர்களால் மரியாதை கொடுக்கப்பட்டால் எங்கள் அனைவருக்குமிடையே இருக்கும்
பிணைப்பு மேலும் இறுக்கமாகும் என்பது நிதர்சனம்.ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் யாழ்ப்பாணத்தான் தான் எல்லாத்துக்கும் தலைப்பாகை கட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டு பிலால்பழச் சுளையை எடுக்கும் போது "கொளுக்" என்று துள்ளி விழுகின்ற பிலாக் கொட்டையள்" போல துள்ளிக் குதிக்கின்றோம். இது பற்றி என் மனக்கிடக்கைகளை ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் புண்ணாக்குகள் நாங்கள் என்றொரு பதிவில் அலசியுள்ளேன்.


நான் இங்கே கதைக்க விழைவது ஒவ்வொருவரும் அவரவர் மாவட்டங்களை விட்டு, தமிழர் என்ற பரந்த வகையிலே ஒன்று சேர்கின்ற அமைப்புக்களிலே நடக்கின்ற/
நடந்துகொண்டிருக்கின்ற செயல்களையும் பற்றித்தான். இதன் ஆழம் தமிழ்ச்சங்கங்கள், பல்கலை மாணவர் அமைப்புக்கள் தொடக்கம் தமிழ்மக்களின் தற்போதைய ஏகப்பிரதிநிதிகளாக இருந்து கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரை அது நீளலாம்.இந்த சமூக அமைப்புக்களில் தலைமை மற்றும் உறுப்பினர் தெரிவுகளில் எப்போதும் யாழ்ப்பாணத்தவருக்கு, காத்திரமான இடம் இருக்கும்/இருந்து கொண்டிருக்கிறது.திறமை இருக்கலாம் அவர்களிடம் இல்லையென்று நான் சொல்லவில்லை.ஆனால் மற்றவர்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டோம் என்று அவர்களிடத்திலே ஒரு எண்ணம் வந்துவிடக்கூடாது.அப்படி வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.அந்தப் பக்குவத்தை நாம் எம்மிலே வளர்த்துக்கொள்ள்ளவேண்டும்.என்றால் நாமும் ஒரு அபிவிருந்தியடைந்த சமூகக் கட்ட்மைப்பாக எம்மை மெருகேற்றிக்கொள்ளலாம்.


இந்தத் தலைப்பாகைக்கட்டுகையைப் பற்றிக் கதைப்பதற்கு ஏராளமான விடயங்கள் இருந்தாலும் இரண்டே இரண்டு விடயங்களை மட்டும் கதைத்து பதிவை நீட்டி முழக்காமல்
முடிப்பது தான் என் திண்ணம்.முதலாவது யாழ்பல்கலைக் கழகத்தின் பொறியியல்ப்பீடத்தின்
அமைவிடம் பற்றியது.மற்றையது வடமாகாணச் சபையின் அமைவிடம் பற்றியது.
இலங்கையிலே தமிழ்ப் பிரதேசங்களில் எந்தவொரு பல்கலைக்கழக்த்திலும் பொறியியல் ப்பீடம் இல்லையென்ற குறையை போக்க மறைந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரான மாமனிதர்.பேராசிரியர் அழகையா துரைராஜாவினால் 1985 ஆம்
ஆண்டு சமர்ப்ப்பிக்கப்பட்ட திட்டம் இன்று 25 வருடங்களைத் தாண்டியும்
கோப்புக்குள்ளேயே திட்டமாக இருந்து கொண்டிருக்க, 1999 ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர் றிச்சட் பத்திரணவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட உறுகுணுப் பலகலைக்கழகத்தின் பொறியியல்ப்பீடம் இப்போது 10 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமனானதொரு பொறியியல்ப்பீடமாக மொறட்டுவை,பேராதனைக்குப் பின் அணி வகுக்கத் தொடங்கிவிட்டது. பொறியியல்ப் பீடத்தை தொடங்குவதில் இருந்த வாதப்ப்ரிரதிவாதத்தை விடுத்து அதன்
அமைவிடம், கிளிநொச்சியிலா யாழ்ப்பாணாத்திலா என்பது தொடர்பில் மேலும் காரசாரமான வாத்ப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பாக யாழ்மாவட்டப் பொறியியிலார்களுக்கிடையே பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தலைமியேற்று நடாத்திய கூட்டத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.


மாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ஹூலின் யாழ்பாணத்தில்தான் பீடம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்(இப்போது ஹுல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இதுவே அலசப்பட்டது நீண்ட நேரமாக).ஆனாலும் நீண்டகால அடிப்படையிலும் ஒட்டுமொத்த தமிழர் என்ற அடிப்ப்டையிலும் நோக்கினால் பேராசிரியர் துரைராஜாவின் கனவுப்படி கிளிநோச்சியில் ஆர்ம்பிப்பதனால் போரினால் மிகவும் சுக்குநூறாகிய அந்தப்பிரதேசம் அபிவிருத்திடியடையக்கூடியாதாக இருக்கும்.எமது இரத்த உறவுகள் மூன்று இலட்சம் பேர் உள்ளே இருந்தது தெரிந்திருந்தும் போருக்கு ஆணையிடச் சொல்லிவிட்டு போர் முடிந்த பின்னும் அதைப்ப்ற்றி ஆராய்ந்து,அதன் சரி பிழைகளைக் கதைத்து, அதன்மூலம் மிகச்சிறந்த அரசியல் அறிஞர்களாய் எங்களைக் காட்டிகொள்வதை விடுத்து நாங்கள் எதையும் பெரிதாய் செய்துவிடவில்லை. நான்காம் ஈழப் போரின் முழுவதையும் மூன்றாம் ஈழபோரின் பெரும்பகுதியையும் தம் தோளிலே சிலுவையாய் சுமந்த மூன்று இலட்சம் யேசுபிரான்கள் அவர்கள். அவர்கள் பிரதேசத்தில் அந்தப்பல்கலை அமந்து,அது நாளை ஆயிரமாயிரம் பொறியிலாளர்களை ஈன்று தரும் போது அந்த "அப்பாவி" சனங்களின் முகத்தில் வரும் சந்தோசத்தைக் காணும் போது எம் முகத்தில் வரும் பாருங்கள் ஒரு பூரிப்பு அதற்கு நிகராக ஒன்றும் இருக்காது இந்த உலகத்தில்.


இதே போலதொரு இடத்தெரிவு தான், இணைந்த வடக்கு - கிழக்கு துண்டாக்கப்ப்ட்டு, வடமாகண சபை அலுவ்லகம் எங்கே அமைப்பது என்ற குழ்ப்பம் வந்தபோது அரசாங்கத்தினால்,வ்டமாகாணத்தில் இருக்கும் எல்லா மாவட்டங்கள்லிருந்தும் சமதூரத்திலிருக்கும் மாங்குளம் தெரிவு செய்யப்பட்டபோது, நிச்சய்மாக உள்ளூர சந்தோசப்பட்ட ஜீவன்களில் நானும் ஒருந்தனாயிருந்திருப்பேன். இதனால் அந்தப்பிரதேசம் சார்ந்து, பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள், பிரதேச அபிவிருத்தி எனப் பல
காரணங்கள் இருந்தன் அந்த சந்தோசத்தின் பின்னால். ஆனால் இப்போது அதே அரசாங்கமே, அதையும் யாழ்ப்பாணத்திலே நுழைக்க முண்டியடிப்பதன்மூலம் எம் பலவீனம் அறிந்து, எமக்கும் அவர்களுக்கும்(அவர்கள் என்று பிரித்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும்.வேறு தெரிவில்லாமல் அந்த சொல்லை பயன்படுத்த வேண்Dஇயிருக்கின்றது) இடையே ஒரு கோடு கீறுவதற்காய்த்தான் இந்த மாகாணசபை அமைவிடத்திப் பயன்படுத்துகிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அரசதிணைக்களங்கள், ஆஸ்பத்திரி என்பன மற்றத் த்மிழ் மாவட்டங்களை விட அதிகமாய் இருக்கின்றன.எனவே இவற்றை நாம் அவர்களுக்கு விட்டுத்தருவதில் எந்தவொரு குடியும் முழுகிவிடப்போவதில்லை.எமக்கு சிங்களவர்களளவுக்கு வச்திகள்,வாய்ப்புக்கள் இல்லாத போதும், எம்மிலும் வலிதாய் உள்ள, எம் இரத்தங்களுக்குப் போவதை நாம் தட்டிப் பறிக்ககூடாது.மாறாக நாம் அதற்காய்ப் பாடுபடவேண்டும்.ஏன் நாம் விட்டுக் கொடுக்கவேண்டும்? எம்மில் திறமை இருக்கின்றது?நாம்
பெரும்பான்மையாக இருக்கின்றோம் என்று சிந்தித்தால், எமக்கும் எமக்கு சம உரிமை தரமறுக்கும் சிங்களவர்களிடம் என்ன தவறு அல்லது அவ்ர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்? உலகெங்கும் ஏதாவது பெரும்பான்மை சிறுபான்மையை அடக்க
நினைத்ததால்/நினைத்துக்கொண்டிருப்பதால் தான் புரட்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.தொடரவும் போகின்றன.நாம் அதிலிருந்து விடுபட்டு வித்தியாச்மான திசையிலே பயணித்தால் எம்மினத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.இந்த மாகாண இலச்சினையில் உள்ளது போல எல்லோரும் சரிநிகை சமானமாக விட்டுக்கொடுத்து வாழ்தல் நலம் பயக்கும் எமக்கு.

(அபிவிருத்திக்கென வடமாகாணத்தில் ஒதுக்கப்பட்ட நிதிட்யில் பெருமளவு,யாழ்ப்பாண மாவட்டத்துக்கே போய்ச்சேர்ந்ததாக/சேர்க்கப்பட்டதாக அண்மையில் ஒரு பத்திரிகையில் வாசித்ததே என்னுள் அடங்கியிருந்த இந்த விடயத்தை எழுதத் தூண்டியது.மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தால் மன்னியுங்கள் நண்பர்களே.

11 comments:

 1. மிக சிறந்த இடுகை உங்கள் கருத்துக்களே என் கருத்துக்களும்...

  ReplyDelete
 2. நல்ல நோக்கு வடலியூரான்...

  ///மாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ///
  அப்படி என்ன வசதியீனங்களைக் காண்கிறார்களோ. நாமும் சாப்பிடமாட்டோம் பசித்தவனையும் சாப்பிடவிடமாட்டோம். நல்ல கொள்கை. உங்கள் போன்றவர்கள் கிளிநொச்சியில் பீடம் அமைய முடிந்த முயற்சிகளைச் செய்யவேண்டும்

  ReplyDelete
 3. வணக்கம் நண்பா,
  நீண்ட நாளாக உங்கள் வலையில் புதிய பதிவுகளைக் காண முடியவில்லையே எனும் ஆதங்கத்தினை உங்களின் இப் பதிவு எனக்குத் தீர்த்து வைத்திருக்கிறது.

  படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 4. உங்கள் கருத்துக்களுக்கு ஒரு சல்யூட்,
  ஆனால் தேர்தலாக இருந்தாலும், இதர விடயங்களாக இருந்தாலும் நாம் குடா நாட்டிற்குத் தான் அதிக முன்னுரிமை கொடுக்கின்றோம்,
  இதுட் ஹான் ஏனைய மாவட்ட மக்களிடையே குறிப்பாகப் பிரதேசவாதத்தினை விதைக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கின்ற நபர்களிடையே
  நல்ல ஒரு தீனியாக அமைந்து இன ஒற்றுமையினைச் சீர் குலைக்கும் ஒரு விடயமாக அமைந்து விடுகின்றது.

  எமக்குள் நாமே பெரும்பான்மை எனும் விடயத்தினைப் புறந் தள்ளி வைத்து விட்டு, ஏனைய மாவட்ட மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் காத்திரமான் செயற்பாடுகளை சரி நிகர் சமானமாய் மேற்கொண்டால் வட கிழக்கில் நிழல் யுத்தமாக அடி மனங்களில் கொந்தளிக்கும் பிரதேச ரீதியான வேறுபாடுகள் களையப்படும் என்பது என் கருத்து சகோ.

  ReplyDelete
 5. நிகழ்வுகள் உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்

  ReplyDelete
 6. நன்றி கிருத்திகன் உங்கள் வருகைக்கும் பின்னூட்டியமைக்கும். வசதியீனம் என்று அவர் தெரிவித்தது,விரிவுரையாளர்கள் கிளிநொச்சியில் தங்க வேண்டி வருமென்பதால் அவர்களது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளில் சேர்த்துப் படிப்பிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.அதாவது பல்கலைக் கழகம் யாழ்ப்பாணத்தில் இருக்குமேயானால்,விரிவுரையாளர்கள் தாங்கள் பல்கலை செல்ல,பிள்ளைகள் பிரபல பாடசாலைகளுக்குச் செல்லலாம்.கிளிநொச்சியில் அவ்வாறான் பிரபல பாடசாலைகளைக் காண்பதென்பது அரிது. அத்தோடு அவர் குறிப்பிட்ட இன்னுமொரு நடமுறை விடயம். மாணவர்கள்,விரிவிஉரையாளர்கள் வாரநாட்களில் தங்கியிருந்துவிட்டு, வார இறுதி நாட்களில் யாழ்ப்பாணம்,திருகோணமலை,மட்டக்களப்பு போன்ற தங்கள் சொந்த இடங்களுக்கு என்று சென்று வரும் போது திங்கள்,வெள்ளிகளில் விரிவுரைகளை சீராக நடட்த முடியாது என்று.நிச்சய்ம் திங்கள் 10 மணிக்குப் பின்னரும் வெள்ளி 2 மணிக்கு முன்னரும் தான்,விரிவுரைகளை நடாத்தமுடியும்.எங்கடை ஆக்களைப் பற்றித் தெரியும் தானே. மற்றும் படி நீங்கள் எங்கடை தலையிலை பெரிய பொறுப்பைச் சுமத்திறியள் பாத்தியளே :)

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றி நிருபன்.

  //இதுட் ஹான் ஏனைய மாவட்ட மக்களிடையே குறிப்பாகப் பிரதேசவாதத்தினை விதைக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கின்ற நபர்களிடையே
  நல்ல ஒரு தீனியாக அமைந்து இன ஒற்றுமையினைச் சீர் குலைக்கும் ஒரு விடயமாக அமைந்து விடுகின்றது.


  நிச்சயமாக நீங்கள் சொன்னதை தான் நான் வேறு உதாரணத்தினூடு சொல்லியிருந்தேன்.எங்களைப் பிரித்து விடுவதற்கு எத்தனை திட்டங்கள் எல்லாம் தீட்டப்படுகின்றது.அதைத் தெரியாமல் நாங்களே அதற்கு துணை போகக் கூடாது என்ற நிச்சயமான ஒரு நோக்கத்திற்காகவே இந்தப் பதிவு எழ்தப்பட்டதேயன்றி, வேறு எந்தவொரு தீய நோக்கங்களுடனும் அன்று என்று மீண்டும் தெரிவிக்க விருபுகின்றேன்.ஒரு இடத்திற்கு அள்ளித் தெளிப்பது ஒன்றும் அங்குள்ளவர்களின் மீதுள்ள பாசத்த்னினாலோ அல்ல பரிதாபத்தினாலோ அல்ல.ஒரு கையால் கொடுக்கப்பட்டதெல்லாம் மறு கையால் இருக்கிறதையும் சேர்த்துப் புடுங்கியது தான் வரலாறு.அதனால் தான் நாம் சிந்திக்க வேண்டும்.இல்லையென்றால் இருக்கிற கோவணமும் போகலாம்.கொடுப்பதென்று மன்மிருந்தால் எல்லாருக்கும் ஒரே சீராகக் கொடுக்கலாம் தானே.ஏன் இந்த வஞ்சம்?

  ReplyDelete
 8. சூப்பர் சார். இது எங்கள் மனதில் ஏற்றுக்கொள்ள முடியாத பிழைகள். நாங்கள் உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் சொன்னது போல மொறட்டுவைப்பிரதேசத்தில் பல்கலைக்கழகம் அமைந்ததாலேயே காட்டுப்பிரதேசம் போல இருந்த அந்த இடம் கொஞ்சம் அபிவிருந்தியடைந்தது. அதைப்போல கிளிநோச்சியிலும் நடக்க வேண்டும்!!

  ReplyDelete
 9. வணக்கம் கார்த்தி.வருகைக்கு ந்னறி.ஆம் நீங்கள் சொன்னால்ப் பிறகு தான் ஞாபகத்துக்கு வருகிற்து.மொறட்டுவை இதற்கு சிறந்த உதாரணம்.சுட்டிக்காட்டியமைக்க்கு நன்றி

  ReplyDelete
 10. Good article with valid points.

  ReplyDelete